மட்டக்களப்பில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது..!

0

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட திக்கோடைப் பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதான தந்தை ஒருவர் தனது 8 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ள நிலையில் நேற்று இரவு வெள்ளிக் கிழமை, பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கூலித் தொழிலாளியான குறித்த தந்தை ஜனவரி மாதம் முதல் தனது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி தந்தையின் கொடூர பாதக செயலை தாயாரிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து நேற்று இரவு குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்.

சம்பவம் குறித்து பொஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் சந்தேக நபரை நீதி மன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.