யாழ் இந்து முன்னாள் அதிபர் நிமலன் காசோலை மோசடியில் மீண்டும் கைது..!

0

யாழ்ப்பாணம் இந்து கல்லூரியின் முன்னாள் அதிபர் சதா நிர்மலன் காசோலை மோசடிக் குற்றச்சாட்டில் இன்று மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் இன்று (5) அவரை கைது செய்துள்ளனர்.

ஒரு லட்சம் ரூபாய் மற்றும் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் காசோலை மோசடி செய்த குற்றச்சாட்டில், முறைப்பாட்டாளரால், யாழ் விசேட குற்றத் தடுப்பு பிரிவில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த மோசடி தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் விசேட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இன்று வடக்கில் பெரும்பாலான பாடசாலைகளில் மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும், ஆசிரியர்களிடமும் பாடசாலையின் அபிவிருத்தி என்ற போர்வையில் பணம் வசூலிக்கும் பணியினை அதிபர்களும், அவர்களின் வால்பிடி ஆசிரியர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

சில பாடசாலைகளில் அபிவிருத்தி சங்கங்களின் ஊடாக தாம் நேரடியாக சம்பந்தப்படாமல் தமது வால்பிடி பெற்றோர்களைக் கொண்டு பொருளாகவும், பணமாகவும் கப்பம் வாங்கும் பணியினை அதிபர்கள் தமது தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.