புதுக்குடியிருப்பு அதிரடிப் படை முகாம் தகர்ப்பின் நினைவு நாள் இன்றாகும்..!

0

மட்டக்களப்பு மாவட்டம் புதுக்குடியிருப்புப் பகுதியில் 05.12.1995 அன்று சிறிலங்கா விசேட அதிரடிப் படையின் முகாம் கரும்புலித் தாக்குதல் மூலம் தகர்க்கப்பட்டதன் 24வது நினைவு நாள் இன்றாகும்.

யாழ். குடாநாட்டை இலங்கை இராணுவத்தினர் ஆக்கிரமித்து யாழ்ப்பாணத்தில் சிங்கக் கொடி ஏற்றிய சில மணி நேரத்திற்குள் விடுதலைப் புலிகளால் வலிந்து மேற்கொள்ளப்பட்ட அதிரடித் தாக்குதலாகும்.

படைத்தள தகர்ப்பின் வெற்றிக்காக தீரமுடன் களமாடி வெற்றிக்கு வித்திட்டு 25 மாவீரர்கள் வீரகாவியமாகினர்.

இத் தளத்தின் மீதான கரும்புலித் தாக்குதலில் கரும்புலி மேஜர் ரங்கன் / தினேஸ்குமார் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

தளத் தகர்ப்பில் வீரகாவியமான மாவீரர்களிற்கு வீரவணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.