எதிர்க்கட்சி தலைவராகும் சஜித்; முடிவை அறிவித்த ரணில்…!

0

எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாசவும், ஐ.தே.க. வின் தலைமைத்துவ பொறுப்புக்களில் தொடர்ந்தும் ரணில் விக்கிரம சிங்கவும் நீடிக்கவுள்ளதாக தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இன்று (05.12.2019) பிற்பகல் இடம் பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டத்தில், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரம சிங்கவும் பாராளுமன்ற குழுவும் இணைந்தே மேற்படி தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர்.

இதன் ஊடாக அரசியலில் இருந்து ரணில் ஒதுங்குவது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.