இலங்கையின் அரசியல் அரங்கிலிருந்து வெளியேறும் ரணில்..!

0

ஐக்கிய தேசிய கட்சியின் சமகால தலைவரும் முன்னாள் பிரதருமான ரணில் விக்ரமசிங்க அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அவருக்கு நெருக்கமான தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஐக்கிய தேசிய கட்சிக்குள் தலைமைப் பதவி மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் தொடர்பில் கடும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக கட்சியிலிருந்து பிரிந்து மாற்று அணியை சஜித் பிரேமதாஸ தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் உருவாக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் ரணிலில் இந்த முடிவு கசிந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.