சுவிஸ் துாதரக பணியாளா் கடத்தப்பட்ட விவகாரம் உண்மையில்லை..!

0

சுவிஸ் துாதரக பணியாளர் கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டதாக கூறப்படுவது அப்பட்டமான பொய் என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நடத்தப்பட்ட விசாரணைகள் அதனை உறுதி செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளாா்.

ஆளும் கட்சி தலைவர்களின் கூட்டம் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் நேற்று மாலை கொழும்பில் இடம் பெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

அத்துடன் சம்பவம் இடம் பெற்றதாக கூறப்படும் நாளில், குறித்த பெண் பணியாளர், தூதரகத்திற்கு அருகில் இருந்து வாடகை கார் ஒன்றின் மூலம் பம்பலப்பிட்டிக்கு சென்றதாகவும், அதனை தொடர்ந்து, அங்கிருந்து மீண்டும் வாடகை கார் மூலம் மாளிகாகந்தை பகுதியில் இருக்கும் தனது வீட்டிற்கு சென்றதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

சிசிடிவி கண்காணிப்பு கமெரா மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயங்கள் தெரிய வந்துள்ளதாகவும் கூறிய அவர், சம்பவம் தொடர்பில் வாடகை காரின் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பணியாளர் கடத்தப்பட்ட பல விபரங்கள் தொழில்நுட்பம் மூலம் நிரூபணம் செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

இந்நிலையில், சட்டமும், நீதிதுறையும் தனது கடைமையை சரியாக செய்யும் என்றும்,எவ்வாறாயினும், நாட்டிற்கு ஏற்பட்ட அவப்பெயரை நீக்கி உண்மையை வெளிக்கொணர தனது அரசாங்கம் ஒருபோதும் தயங்காது எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.