தமிழர்கள் முதலைக்கு உணவாக்கப்பட்ட விவகாரம்; விசாரணைகள் ஆரம்பம்..!

0

பாதுகாப்புச் செயலாளராக கோட்டபாய பதவி வகித்த காலத்தில் வெள்ளை வாகனத்தில் கடத்தி செல்லப்பட்ட 300 க்கு மேற்பட்ட தமிழர்கள் முதலைக்கு உணவாக போட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் இன்று தெரிவித்தனர்.

இதேவேளை இச் சம்பவம் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் கோட்டா தலைமையிலான மகிந்த அரசாங்கம் பாரிய சர்வதேச நெருக்கடியைச் சந்திக்கும் அதேவேளை உறுதிப்படுத்தப் படாத பட்சத்தில் ராஜித உள்ளிட்ட குழுவினர் பாரிய சட்டச் சிக்கலை எதிர் கொள்ளவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.