பாராளுமன்றத்திற்கு இன்று நள்ளிரவுடன் தற்காலிக மூடு விழா..!

0

புதிய ஜனாதிபதி பதவியேற்ற கையோடு பாராளுமன்றத்தின் புதிய அமர்வுகள் ஜனாதிபதியின் அக்கிராசன உரையுடன் ஆரம்பிக்க வேண்டிய சம்பிரதாயம் இருப்பதால் பாராளுமன்றம் இன்று நள்ளிரவுடன் ஒத்திவைக்கப்படுவதாக அறிய முடிகின்றது.

இதன்படி இரண்டு வாரங்கள் வரை பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படலாம் என்பதுடன் காபந்து அரசின் அமைச்சரவை செயற்பாட்டில் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை பாராளுமன்றம் நாளை கூடவிருந்த நிலையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.