முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் அரசியலில் ஈடுபடுவார் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உப தலைவர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு தலைமைத்துவம் வழங்கிய நிலையில் தனது அரசியல் பயணத்தை அவர் தொடர்வார் என ரோஹன லக்ஷ்மன் குறிப்பிட்டுள்ளார்.
பெற்றுக் கொண்ட புதிய வெற்றியை மிகவும் அர்த்தமுள்ளதாக முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும்.
எதிர்வரும் 3 மாதங்களுக்குள் நாடாளுமன்றத்திற்கு வருவதா இல்லையா என்பது தொடர்பில் கூற முடியாது.
தேர்தல் காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பாதுகாப்பதாக கூறி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க உட்பட சிலர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். எனினும் மக்கள் அதற்கு உரிய பதிலை வழங்கியுள்ளனர்.
அத்துடன் கட்சியின் ஒழுக்க நெறியை மீறியவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மைத்திரியை பாதித்த சில விடயங்கள்…
- தனது உத்தியாகபூர்வ வீட்டை மாற்றி வேறொரு வீட்டை வழங்க மேற்கொள்ளப்படும் முயற்சி.
- பதவிக்கால இறுதியில் மரணதண்டனை கைதி ஒருவரை விடுதலை செய்த விடயம் ஜனாதிபதியின் அதிகாரத்தினை மீறி செயற்பட்டிருப்பதால் நீதிமன்றம் செல்ல வேண்டிய சூழ்நிலை.
- பழுதடைந்த அரிசியை வைத்திருந்த குற்றச்சாட்டில் தனது நெருக்கமான ஒருவரின் பொலனறுவை நெல் ஆலைக்கு சீல்வைக்கப்பட்டமை.
- அமைச்சர் நியமனத்தில் தம்மை கணக்கில் எடுக்காமை.
- தான் கோரிய மகாவலி அபிவிருத்தி அமைச்சை பொலனறுவை ரொஷான் எம் பிக்கு வழங்கியமை.
- தேசியப்பட்டியல் எம் பி ஒன்றை வழங்க நடவடிக்கை எடுக்காமை.
- மீண்டும் அரசியலுக்கு வருவேன் என மைத்ரி சவால் விட்டமைக்கு இவைதான் காரணங்களாக கூறப்பட்டுள்ளது.
புதிய நேர்மையான அரசியல் கலாச்சாரம் ஒன்றை ஆரம்பிக்க சஜித்துடன் மைத்ரி கூட்டுச் சேர்வார் என எதிர் பார்க்கப்படுகிறது.
இதேவேளை தூரநோக்கற்று மொட்டுக்கு உயிர் கொடுத்த சுதந்திரக் கட்சி மீள் எழிச்சி பெற முடியாத வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.