க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான அவசர அறிவித்தல்..!

0

இம்முறை சாதாரண தர பரீட்சையில் தோற்றவிருக்கும் மாணவர்களில் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் அருகில் உள்ள பரீட்சை மத்திய நிலையங்களுக்கு சென்ற பரீட்சை எழுத முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

சாதாரண தரப் பரீட்சையானது நாடளாவிய ரீதியாக பரீட்சை நடைபெறவுள்ளதுடன் இம்முறை வரலாற்றில் முதல் தடவையாக அதிகளவானோர் தோற்றவுள்ளனர் என்ற சாதனையைப் படைத்துள்ளது.

இதேவேளை பரீட்சை மோசடிகளைத் தடுப்பதற்காக இம்முறை மாணவர்களின் உடலை பொருத்தமான ஆசிரியர்களினூடாக முழுமையாக சோதனையிடுவதற்கும் பரீட்சைத் திணைக்களத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.