2020 பெப்ரவரி 3 ஆம் வாரம் பாராளுமன்றம் கலைக்கப்படும்..!

0

தற்போதைய பாராளுமன்றம் நான்கரை ஆண்டுகளைக் கடந்தவுடனேயே அதனைக் கலைத்து, பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு கோத்தபாய அரசாங்கம் தீர்மானித்துள்ளது எனத் தெரிய வருகின்றது.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோர் இதுதொடர்பில் நேற்று முன்தினம் நீண்ட நேரம் கலந்தாலோசித்தாகத் தெரிய வருகின்றது.

2015 ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தல் நடாத்தப்பட்டதுடன், 19 ஆவது அரசியல் யாப்பிற்கு ஏற்ப நான்கரை ஆண்டுகள் பூர்த்தியாகும் வரை பாராளுமன்றத்தைக் கலைக்க ஜனாதிபதிக்கு இயலாது.

தற்போதைய பாராளுமன்றம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதியே நான்கரை ஆண்டுகளைப் பூர்த்தி செய்கின்றது. எனவே, பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதிக்கு முன்னர் பாராளுமன்றத்தைக் கலைக்க வேண்டும் என ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் அமைச்சர்கள் பிரேரணை முன் வைத்துள்ளனர்.

அதற்குக் காரணம் தற்போதைய சபாநாயகர் தனது பதவியிலிருந்து விலகமாட்டேன் எனக் குறிப்பிட்டிட்டுள்ளார். கூடுதலான பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் இருப்பதனால், சிறப்பாகப் பாராளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பொதுத் தேர்தல் நடாத்தப்படுவது அவசியமானது என ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் விரைவில் இன்னொரு தேர்தல் திருவிழாவிற்கு மக்கள் தயாராக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அதேவேளை பெப்ரவரி 22ம் திகதி என்பது தமிழர் வாழ்வில் மறக்க முடியாத நாளாகும். பெப்ரவரி 22,2002 அன்றே விடுதலைப் புலிகளுக்கும், ரணில் அரசுக்கும் சமாதான ஒப்பந்தம் செய்யப்பட்டு, தமிழர் விடுதலைப் போராட்டத்தை அழிப்பதற்கும் தமிழர்களை அழிப்பதற்கும் ரணில் தலைமையிலான குழு அத்திவாரம் போட்ட நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.