இதயம் நொறுங்கிடுச்சு, கர்மா சும்மா விடாது; கீர்த்தி சுரேஷ் கொந்தளிப்பு

0

தெலுங்கானாவில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த 27 வயது கால்நடை மருத்துவரான ப்ரியங்கா ரெட்டி பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

பாலத்திற்கு அடியில் எரிந்த நிலையில் கிடந்த ப்ரியங்காவின் உடலை பார்த்த அவரின் குடும்பத்தார் கதறி அழுததை பார்த்தவர்களுக்கு கண்ணீர் வந்து விட்டது.

மேலும் ஒரு பெண்ணுக்கு நாட்டில் பாதுகாப்பே இல்லையா என்ற கோபமும் சேர்ந்து வருகிறது.

இந்நிலையில் தென் இந்திய திரையுலக பிரபலங்கள் ப்ரியங்கா ரெட்டிக்கு நடந்த கொடுமைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கீர்த்தி சுரேஷ்

டாக்டர் ப்ரியங்கா ரெட்டி பலாத்காரம் செய்யப்பட்டு, எரித்து கொலை செய்யப்பட்டது அறிந்து அதிர்ச்சி அடைந்ததுடன், இதயம் நொறுங்கிவிட்டது.

பாதுகாப்பான நகரம் என்று நான் நினைத்த ஹைதராபாத்தில் நடந்துள்ள இந்த சம்பவத்தை பார்த்து பேச்சே வரவில்லை.

இந்த நாடு பெண்களுக்கு பாதுகாப்பானதாக என்று மாறும். கொடூர சைக்கோக்களை கண்டு பிடித்து, உடனே தண்டிக்க வேண்டும்.

அந்த பெண்ணின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த இழப்பை தாங்கிக் கொள்ள கடவுள் தான் அவர்களுக்கு தெம்பை கொடுக்க வேண்டும்.

எனக்கு கர்மா மீது நம்பிக்கை உண்டு என்று கீர்த்தி சுரேஷ் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.