இபோசவில் முறையற்ற விதத்தில் வழங்கப்பட்ட சகல நியமனங்களும் இரத்து..!

0

இலங்கை போக்குவரத்து சபைக்கு கடந்த ரணில் அரசின் காலத்தில் சிபாரிசின் அடிப்படையில் முறையற்ற விதமாக வழங்கபட்ட பதவி உயர்வுகள் அனைத்தும் இரத்துச் செய்யப்படவுள்ளதாக அதன் முதிய தலைவர் எல். எச். திலகரட்ண எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்க்ஷ ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் இவ்வாறான முறையற்ற அரசியல் நியமனங்கள் வழங்கப்பட்டது போல் நல்லாட்சி என்ற நரி ஆட்சியிலும் மேற்கொள்ளப்பட்டது.

அவை இரத்துச் செய்யப்படவுள்ளதுடன் இனி வரும் காலங்களில் தகுதி காண் அடிப்படையில் சாலைகளின் தேவைகேற்ப நியமனங்கள் வழங்கபடும் எனவும் தகுதி உள்ளவர்களுக்கு மீள் பரிசீலினையின் பின்னர் வழங்கபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கோத்தபாய ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் மேற்கொள்ளும் இவ்வாறான அதிரடி நடவடிக்கைகள் காரணமாக தமிழ் மக்களும் கோத்தாவை புகழ்வதை அவதானிக்க முடிகின்றது.