வரணிக் குடும்ப முன் பள்ளிகளின் கலை விழாவும் ஆண்டு நிறைவு நிகழ்வு 2019

0

29/11/2019 வெள்ளிக் கிழமை முற்பகல் 09.00 மணிக்கு சுட்டிபுரம் கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள வரணி கலாசார மத்திய நிலைய மண்டபத்தில் வரணிக் குடும்ப முன்பள்ளிகளின் ஒழுங்கமைப்பில் வரணிப் பிரதேச முன்பள்ளி இணைப்பாளர் திருமதி கே.லோகிதன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக தென்மராட்சி கல்வி வலய முன்பள்ளி உதவி கல்விப் பணிப்பாளர் திருமதி ச.அரியநாயகம், சிறப்பு விருந்தினர்களாக சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் திரு சி.பிரபாகரன், தென்மராட்சி கிழக்கு லயன்ஸ் கழக ஒருங்கிணைப்பாளர் திரு.த.ரவீந்திரன் கௌரவ விருந்தினர்களாக க.அருட்செல்வம் (முகாமையாளர் ப.தெ.வ.அ.கூட்டுறவு கொத்தணி வரணி) திரு வே.நாகதேவன் (தலைவர் வரணி ஒன்றியம்) திருமதி சோ. ஜெனார்த்தனன் (முகாமையாளர் செலிங்கோ லைப்)

ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். வரணி எல்லைக்கு உட்பட்ட முன்பள்ளி மாணவர்கள் அனைவரிற்கும் பரிசில்களும் நினைவுச் சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றன.

செய்தியாளர் விஜயகுமார்