கோத்தாவிற்கு மேள, தாளங்களுடன் அமோக வரவேற்பு..!

0

உத்தியோகபூர்வ விஜயமாக புதுடில்லி சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை, புதுடில்லி விமான நிலையத்தில் இந்திய மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வி.கே.சிங் வரவேற்றார்.

சாதாரண பயணிகள் முனையத்தினூடாக சென்று, சுங்க மற்றும் குடியகல்வு பணிகளை முடித்துக் கொண்டு, புறப்பட்டார்.

இந்த பயணத்தில் 10 உறுப்பினர்களை கொண்ட தூதுக் குழுவே பயணமாகியது.

கோட்டாவின் வருகையை முன்னிட்டு தலைநகர் புதுடில்லியில், பல இடங்களில் வரவேற்பு பதாதைகள் வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை தான் பதவியேற்ற குறுகிய நாட்களில் பல்வேறுபட்ட அதிரடி நடவடிக்கைகளையும், முன்மாதிரி வேலைத் திட்டங்ளையும் மேற்கொண்டு தமிழ் மக்களின் மனங்களைக் கவர்ந்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.