நேற்றைய தினம் (27) புதிதாக 35 இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் மூன்று பிரதி அமைச்சர்கள் ஜனாதிபதி கெளரவ கோட்டாபய ராஜபக்ச அவர்களின் முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் சத்திய பிரமாணம் செய்து கொண்டனர்.
அந்த வகையில்,
- சமல் ராஜபக்ஷ – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
- வாசுதேவ நாணயக்கார- நீர் வழங்கல், வடிகாலமைப்பு இராஜாங்க அமைச்சர்
- காமினி லொகுகே- நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
- மஹிந்த யாப்பா – நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
- எஸ்.பி.திசாநாயக்க- காணி மற்றும் காணி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
- ஜோன் செனவிரத்ன- பொருளாதார மற்றும் கொள்கை மேம்பாடு இராஜாங்க அமைச்சர்
- மஹிந்த சமரசிங்க- உள்ளூராட்சி மற்றும் உள் விவகாரங்கள் இராஜாங்க அமைச்சராக
- சீ.பி. ரத்நாயக்க- புகையிரத சேவைகள் இராஜாங்க அமைச்சர்
- லக்ஷ்மண் யாப்பா- தகவல் தொடர்பாடல் இராஜாங்க அமைச்சர்
- சுசந்த புஞ்சி நிலமே- சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
- அனுர பிரியதர்சன யாப்பா- வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகாரம் இராஜாங்க அமைச்சர்
- சுசில் பிரேம்ஜயந்த்- சர்வதேச தொடர்புகள் இராஜாங்க அமைச்சர்
- பிரியங்கர ஜயரத்ன- சுகாதாரம் இராஜாங்க அமைச்சர்
- ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய- கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சர்
- மஹிந்தானந்த அளுத்கமகே- மின்சாரம் மற்றும் இராஜாங்க அமைச்சர்
- துமிந்த திசாநாயக்க- இளைஞர் விவகாரம் இராஜாங்க அமைச்சர்
- ரோஹித அபேகுணவர்த்தன- ஆற்றல் வலு இராஜாங்க அமைச்சர்
- தயாசிறி ஜயசேகர- கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்
- லசந்த அலகியவன்ன- அரசாங்க முகாமைத்துவம் இராஜாங்க அமைச்சர்
- கெஹலிய ரம்புக்வெல்ல- முதலீட்டு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
- அருந்திக பெர்னாண்டோ- சுற்றுலாத்துறை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
- திலங்க சுமதிபால- தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் இராஜாங்க அமைச்சர்
- மொஹான் பிரியதர்சன- மனித உரிமைகள் மற்றும் நீதி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர்
- விஜித பேரகொட- மகளிர் மற்றும் சிறுவர் உரிமைகள் இராஜாங்க அமைச்சர்
- ரொஷான் ரணசிங்க- மகாவலி இராஜாங்க அமைச்சர்
- ஜனக இலுக்கும்புர- ஏற்றுமதி விவசாயப் பயிர்கள் இராஜாங்க அமைச்சர்
- விதுர விக்கிரமநாயக்க- கமத்தொழில் இராஜாங்க அமைச்சர்
- செஹான் சேமசிங்க- வங்கிகள் அபிவிருத்தி மற்றும் கடன் திட்டங்கள் இராஜாங்க அமைச்சர்
- கனக ஹேரத்- துறைமுக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
- திலும் அமுனுகம- போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவம் இராஜாங்க அமைச்சர்
- லொஹான் ரத்வத்தை- நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
- விமலவீர திசாநாயக்க- வனசீவராசிகள் இராஜாங்க அமைச்சர்
- ஜயந்த சமரவீர- சுற்றாடல் இராஜாங்க அமைச்சர்
- சனத் நிஷாந்த- மீன்பிடி இராஜாங்க அமைச்சர்
- தாரக பாலசூரிய- சமூக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
பிரதியமைச்சர்கள்
- நிமல் லான்சா – பெருந்தோட்ட அபிவிருத்தி பிரதியமைச்சர்
- காஞ்சன விஜேசேகர- கடற்தொழில் மற்றும் நீர் வள பிரதியமைச்சர்
- இந்திக அனுருத்த- பொதுநிர்வாகம் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் பிரதியமைச்சர்
ஆகியோர் நியமிக்கப் பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.